நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது.

அதிமுக கூட்டணி. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியுற்று தேமுதிகவின் வாக்கு விகிதம் குறைந்துள்ளதால்  அரசியல் கட்சிக்கான அந்தஸ்த்தை இழந்துள்ளது தேமுதிக, ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் பதிவாகும் மொத்த வாக்கில் 8 சதவீதம் பெற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. தற்போது தேமுதிக கட்சி கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே வாங்கியுள்ளது. இதையடுத்து தேமுதிக மாநில அந்தஸ்தை இழந்துள்ளது. 

இதே போல் பாமக  மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் அன்புமணி உள்ளிட்ட 7 பேரும் தோல்வி அடைந்தனர். ஏற்கனவே மாநில அங்கீகாரத்தை இழந்த பாமக, இந்த தேர்தலில் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுவிடலாம் என நினைத்தனர். இதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால், 5.42 சதவீத அளவே வாக்கு வாங்கியதால் பாமகவும் மீண்டும் அங்கீகாரம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் படு தோல்வியால் விரக்தியில் இருக்கிறது தேமுதிக மற்றும் பாமக. இதன் வெளிப்பாடாக, நேற்று பிரேமலதா பேட்டியும், ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. 

சென்னையில் நேற்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,  மத்திய மோடி ஆட்சி  தொடர்கிறது, எந்த மாற்றமும் இல்லை. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு 37 தொகுதிகள் கொடுத்தார்கள். இந்தமுறை திமுகவுக்கு கொடுத்திருக்கிறார்கள். பெரிய மாற்றம் ஏதுமில்லை. இதனால் இழக்கப்போவது தமிழ்நாடும், தமிழக மக்களும்தான். கூட்டணியில் வெற்றிபெற்றிருந்தால் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கலாம். பல திட்டங்களால் பலவிதமாக தமிழ்நாட்டை முன்னேற்றியிருக்கலாம். அதற்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை  ஜெயிக்க வைக்காத மக்கள் மீது கடுப்பில் பேசியது வெளிப்பட்டது.

அதேபோல ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்;  நடப்பு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மீண்டும் அமையவுள்ள மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்? என்று தெரியவில்லை. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே, தங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத தி.மு.க., இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்?. அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது என காட்டமாகவே கூறியுள்ளார்.