Draupadi Murmu : பாஜக கூட்டணியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன.

பாஜக கூட்டணியின் சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் சர்ச்சைக்கு பேர்போன பிரபல திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா மறுபடியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதையும் படிங்க : AIADMK : அதிமுக அலுவலகத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இபிஎஸ் போட்டோ.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆவேசம்
ராம் கோபால் வர்மா
அவர் வெளியிட்ட தன்னுடைய ட்விட்டர் பதிவில், ' ’திரெளபதி குடியசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார் ? முக்கியமாக கௌரவர்கள் யார் ? என்று குறிப்பிட்டிருந்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த சர்ச்சை கருத்து எஸ்.டி, எஸ்.சி பிரிவினரை இழிவுபடுத்துவதாக இருப்பதாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூடூர் நாராயண ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு தற்போது செய்யப்பட்டுள்ளது.ஆனால் தான் திரௌபதி முர்முவை அவமதிக்கவில்லை என ராம் கோபால் வர்மா ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்த ராம் கோபால் வர்மாவின் சர்ச்சை கருத்து திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் மன உளைச்சலில் இருக்கிறாரா? எங்களுக்கு தான் மன உளைச்சல்.. பீல் பண்ணிய ஜெயக்குமார்
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்
