Asianet News TamilAsianet News Tamil

ராஜ்யசபா தேர்தலில் எம்எல்ஏவை தட்டிதூக்கிய காங்கிரஸ்.. பாஜகவின் பி டீம் காங்கிரஸே.. கொந்தளிக்கும் குமாரசாமி!

பாஜகவின் பி டீம் காங்கிரஸ் கட்சிதான் என்று மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

Rajya Sabha polls .. BJP's B Team Congress .. Kumaraswamy attacked!
Author
Bangalore, First Published Jun 10, 2022, 9:26 PM IST

கர்நாடகாவில் மாநிலங்களவைக்கு 4 இடங்களுக்கு 6 பேர் களத்தில் குதித்தனர். இதனால், மாநிலங்களவை தேர்தல் இன்று கர்நாடகாவில்  நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நான்காவது இடத்தைப் பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கும் மதசார்பற்ற ஜனதாளதளத்துக்கும் கடும் போட்டி ஏற்பட்டது.  நான்காவது இடத்தை வெல்ல பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் என மூன்று கட்சிகளுக்குமே பலம் இல்லை.  மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தியதால், 4வது இடத்தை வெல்லப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தங்கள் வேட்பாளர் டி குபேந்திர ரெட்டியை ஆதரிக்குமாறு காங்கிரஸுக்கு கோரிக்கை விடுத்தார்.

Rajya Sabha polls .. BJP's B Team Congress .. Kumaraswamy attacked!

ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி, குமாரசாமியின் கோரிக்கையை நிராகரித்தது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும்படி குமாரசாமிக்கு காங்கிரஸ் பதில் அளித்தது. ஏற்கனவே 2020 இல் முன்னாள் பிரதமர் எச் டி தேவகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் வென்றதையும் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் 37 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற போதிலும் குமாரசாமியை முதல்வர் ஆக்கியதையும் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டு மதசார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவை கோரி காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்க குமாரசாமி மறுத்துவிட்டார். இதற்கிடையே இன்று நடைபெற்ற தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ சீனிவாச கவுடா காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார். 

Rajya Sabha polls .. BJP's B Team Congress .. Kumaraswamy attacked!

இதுபற்றி சீனிவாச கவுடா கூறுகையில், “எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும், அதனால் அந்தக் கட்சிக்கு நான் வாக்களித்தேன்” என்று தெரிவித்தார். இதனால், குமாரசாமி கடும் அதிர்ச்சி அடைந்தார் . இதனையடுத்து மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரம் நடப்பதாக குமாரசாமி குற்றம் சாட்டினார். “காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. காங்கிரஸ் கட்சி இன்று தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டிவிட்டது. காங்கிரஸ் கட்சிதான் பாஜகவின் 'பி' டீம். இந்தியாவில் பாஜகவின் எழுச்சிக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்” என்று குமாரசாமி தெரிவித்தார். இதற்கிடையே நான்காவது இடத்துக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Follow Us:
Download App:
  • android
  • ios