Asianet News TamilAsianet News Tamil

விடுதலையான முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் திடீர் உண்ணாவிரம்..! தனி அறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Rajiv killers imprisoned in Trichy special camp go on hunger strike
Author
First Published Nov 14, 2022, 12:04 PM IST

ராஜிவ் கொலையாளிகள் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7  பேர் கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் உரிய முடிவு எடுக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து  தங்களையும் விடுதலை செய்யும் படி நளினி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

கவர்னர் ஜெனரலாக நடந்துகொள்ளும் ஆளுநர்கள்..! 6 பேர் விடுதலையை சுட்டிக்காட்டி முரசொலி விமர்சனம்

Rajiv killers imprisoned in Trichy special camp go on hunger strike

 சிறப்பு முகாமில் உண்ணாவிரதம்

இதனையடுத்து நேற்று முன் தினம்  சிறையில் இருந்து 6 பேர் வெளியான நிலையில், இலங்கை தமிழர்களான  இராபர்ட் பயஸ்,  ஜெயக்குமார்,  சாந்தன்,  முருகன் ஆகியோரை திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.  அங்கு 4 பேரையும் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த 4 பேரும் சிறை வளாகத்தில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களை  தனி அறையில் அடைத்து வைக்கக்கூடாது என்றும் சக வெளிநாட்டு அகதிகளை நடத்துவது போல் தங்களையும் நடத்த வேண்டும் என கூறி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.  இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த  திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

இதையும் படியுங்கள்

கொலையாளிகள் விடுதலை நல்லதல்ல! ராஜீவ் கொலையாளிக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா- கே எஸ்.அழகிரி ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios