இந்தத் தேர்தலில் உண்மையான விவகாரங்களைப் பற்றி பேசுவதை பிரதமர் மோடி தவித்தார். தேவையில்லாத கதைகளைக் கூறி வருவதால் மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்பு வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு 6-வது கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது. டெல்லி, உ.பி., ம.பி. உள்பட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் வாக்குரிமை உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவுரங்கசீப் லேன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

