மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி, மயிலாடுதுறை  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்..

"நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆன்மிகவாதியாகவும், தனிமை விரும்பியாகவும் உள்ள ரஜினிகாந்தால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது.இந்த சந்தர்ப்பத்தையும் நழுவவிட்டால், இனி அவர் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை. தமிழக மக்களின் எதிர்ப்புக்கு பயந்தே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். இதற்காக, துணிச்சலாக தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டது பாராட்டுக்குரியது.மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.