நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், பிரதமர் மோடி 351 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறார். இவர் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி வரும் 30 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற உள்ளது.

இதில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் பிரதமர் மோடி, பதவியேற்பு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

'தர்பார்' பட ஷூட்டிங்கிற்காக மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்த படியே நேரடியாக டெல்லி சென்று, மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் 30 ஆம் தேதி அன்று கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றதும் ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.