எந்த தந்தை, எந்த மகன், என்ன ஊரு, என்ன சம்பவம்? இப்படி எதுவுமே சொல்லமால் ஒரு கண்டண பதிவை போடமலே இருந்திருக்கலாம் என ரஜினிக்காந்தின் கருத்துக்கு கண்டனம் எழுந்து வருகிறது. 

 

எந்த தந்தை,எந்த மகன் ,என்ன ஊரு, என்ன சம்பவம் இப்ப எதுவுமே சொல்லமா ஒரு கண்டண பதிவை போடமலே இருக்கலாம் ... தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது எனக்கூறி ரஜினிகாந்த் #சத்தியமா_விடவே_கூடாது என்கிற ஹேஸ்டாக்கை பதிவிட்டு தனது கோப முகத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  இந்த ஹேஸ்டேக் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. 

 

அதில் ரஜினியில் குரலுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தாலும் சிர் எதிர்மறையான விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து நெட்டிசன்கள் 'எந்த தந்தை,எந்த மகன் ,என்ன ஊரு, என்ன சம்பவம் இப்படி எதுவுமே சொல்லமா ஒரு கண்டண பதிவை போடமலே இருக்கலாம்... என்றும் மற்றொருவர், சம்பவம் நடந்து 7 நாட்களுக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தை விடவே கூடாது... சத்தியமா விடவே கூடாது என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.