டுவிட்டரில் மட்டும் இது வரை அக்கவுண்ட் வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தபின் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும்  பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓபன்  பண்ணியுள்ளார்.

மேடை மேடையாக பேசிய காலம் போய் தற்போது எளிதாக தங்கள் கொள்கை, கருத்துக்கள், கண்டனங்கள், இரங்கல் என அனைத்தையும் நொடியில் பதிவு செய்ய அரசியல் தலைவர்கள் இணையதளங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்

தற்போதைய டிஜிட்டல் உலகில் இவற்றின் மூலம் இளைஞர்கள் வசம் உள்ள ஓட்டுக்களை வாங்குவதற்கு இது போன்ற இணையதளங்கள் பெரிதும் அரசியல் காட்சிகளுக்கு பயன் உள்ளவையாக உள்ளன. இதற்கென ஒரு அட்மினையும் வைத்து அரசியல் கட்சிகள் தங்களின் சமூக வலைத்தளங்களை இயக்கிவருகின்றன.

அண்மையில் கட்சி தொடங்கியுள்ள  நடிகர் கமல்ஹாசன், தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெரும்பாலான நடவடிக்கைளை டுவிட்டர் மூலமே செய்து வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு வலைதளங்களையே பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டுவிட்டரில் மட்டும் அக்கவுண்ட் வைத்திருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் ஆகியவற்றில் அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளார். ஓபன் செய்த சில மணிநேரங்களிலேயே ரஜினியின் பேஸ்புக் பக்கத்தில் 133,445 பேர் பின் தொடர்கின்றனர். வணக்கம் என அவர் போட்ட ஒரு போஸ்ட்டிற்கு 1.9 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது இதே போல் ரஜினிகாந்த்தின்  இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் 15.9 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்