குடியரசுத் துணைத்தலைவரும்,  முன்னாள் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழா,  சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா,  குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விஐபிகளுக்கு மத்தியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  வெங்கைய நாயுடு குறித்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  சுத்தமான ஆன்மீகவாதியான இவர் அரசியலுக்கு வந்தது ஆச்சரியத்தை அளித்தது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

திடீரென இந்த டாப்பிக்கை விட்டு ஜம்ப் ஆன ரஜினி,  அமித்ஷாவை வானளாவி அளவிற்கு புகழ்ந்து தள்ளிவிட்டார்.  தான் நடித்த படமான பாட்ஷாவில் பிளாஷ்பேக் பற்றி கூறும்போது எனக்கு ஒரு பேர் இருக்கு பாட்ஷா, மாணிக் பாட்ஷா.... என்ற ஸ்டைலில் கூறுவார்.  அதேபோன்றுதான் அதே பாணியில் அமித்ஷா யாரென்று இப்போது புரிந்திருக்கும், என பஞ்சு வைத்து பேசினார். இதனால் அங்கிருந்த அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதுமட்டுமின்றி,  மோடி மற்றும் அவரது செயல்பாடுகளுக்கு இணையாக அமித்ஷாவை தூக்கி வைத்து ரஜினி புகழாரம் சூட்டினார்.  இதை அரைகுறையாக புரிந்து கொண்டு அமைதி ஆகும் நன்கு ரசித்து சிரித்தார்.  ரஜினிகாந்தின் இந்த பரபரப்பான பேச்சு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் ஆழமாக கவனித்து உட்கார்ந்திருந்தனர்.  மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவை ரஜினிகாந்த் மிகப்பெரிய அளவில் புகழ்ந்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.