ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு பதில் ரஜினி வாயை மூடி மவுனமாக இருந்திருக்கலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பேரணியின் போது, ராமர் மற்றும் சீதையின் உருவப்படங்கள் நிர்வாணமாக எடுத்துவரப்பட்டதாகவும், செருப்பால் அடிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்தை தெரிவித்தார். ஆனால், தவறான கருத்தை பேசியதாக அவர் மீது புகார் கூறப்பட்டு, இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்காக காலையில் ஒருவர், மாலையில் மற்றொருவர்... ஷிப்ட் முறையில் கள்ளக்காதல்.. இடையூறாக இருந்த குழந்தைக்கு மது ஊட்டிய அட்டூழிய தாய்..!

ரஜினிகாந்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திராவிடர் கழகமும், பெரியார் பெயரிலான பல்வேறு இயக்கங்களும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ரஜினிகாந்த் மீது பல்வேறு காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. மேலும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் நான் இல்லாதது எதையும் சொல்லவில்லை. 'அவுட்லுக்' என்ற பத்திரிகையில் வந்த செய்தியை தான் சொன்னேன். எனவே, மன்னிப்பு கேட்க முடியாது, என்றார். ரஜினியின் இந்த விளக்கத்திற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- பெரியார் மதிப்பும், மரியாதையும் மிக்கவர். 1971-ல் நடைபெறாத விஷயத்தை பேசி, மக்களை ரஜினி திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது. எந்த ஆதாயத்திற்காக நடக்காத ஒன்றை பேச வேண்டும்? தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு முன்பாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால், அதிமுக பயப்படாது என தெரிவித்துள்ளார்.