அதை வலியுறுத்தும் விதமாக இன்று அவர் வெட்டிய பிறந்தநாள் கேக்கில் 'நவ் ஆர் நெவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்துக்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் 'நவ் ஆர் நெவர்' (Now Or Never ) அதாவது இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்கிற பொருள்படும் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனது அரசியல் வருகையை அறிவித்தபொழுது 'மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல' எனக் குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதை வலியுறுத்தும் விதமாக இன்று அவர் வெட்டிய பிறந்தநாள் கேக்கில் 'நவ் ஆர் நெவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 12, 2020, 9:33 PM IST