சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலில் குதிப்பார் என்கிற பேச்சு பல வருடங்களாக அடிபட்டு வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் அதிகாரபூர்வமாக அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தார்.

அதன்பின் அவர் தனது ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை விரிவுபடுத்தினார் என்பதும் அதற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமனம் செய்தார் என்பதும் இந்த ரஜனி மக்கள் மன்றம் தான் அரசியல் கட்சியாக உருவாகும் என கூறினார். ஆனால் தற்போது வரை அரசியல் கட்சியாக உருவாகாமலே உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த டுவீட் மூலம் அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின் வாங்கி விட்டதாக செய்திகள் பரவியது. இருப்பினும் அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கூறவில்லை என்பதால் அவரது ரசிகர்கள் அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை ரஜினிகாந்தை எடுப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தனர்

இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் 30ஆம் தேதி (இன்று) ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அவர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து அனைத்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் இன்று அரசியல் நகர்வு குறித்து முக்கிய செய்தியை ரஜினிகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி சில மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என அறிவித்துள்ளது நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.