தாம் தமிழகத்தில் இருந்தால் தன்னை பலரும் நச்சரிப்பார்கள் என்பதால் ரஜினி ட்ரீட்மெண் எடுப்பதாக காரணம் காட்டி அமெரிக்கா சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்து அதிமுக – பாஜக இடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில் அமித்ஷா மீண்டும் சென்னை வர உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது குறித்து அதிமுக – பாஜக இடையே சர்ச்சையான கருத்துக்கள் எழ தொடங்கியுள்ளன.
இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவிற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14 அன்று சென்னை வர உள்ளார். முன்னதாக அமித்ஷா சென்னை வந்தபோது அதிமுக – பாஜக கூட்டணி முடிவானது. அதுபோல அமித்ஷா மீண்டும் சென்னை வரும் நிலையில் பாஜகவுக்கு கூட்டணியில் எத்தனை இடங்கள்? முதல்வர் வேட்பாளர் சர்ச்சை உள்ளிட்டவை குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நல குறைவால் கட்சி தொடங்குவதை கை விட்ட ரஜினிகாந்தையும் அமித்ஷா சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கட்சி தான் தொடங்கவில்லை. வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க ரஜினியிடம் அமித் ஷா வலியுறுத்துவார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தாம் தமிழகத்தில் இருந்தால் தன்னை பலரும் நச்சரிப்பார்கள் என்பதால் ரஜினி ட்ரீட்மெண் எடுப்பதாக காரணம் காட்டி அமெரிக்கா சென்று ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி தேர்தல் முடிந்த பிறகே நாடு திரும்புவார் என தெரிகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 4, 2021, 11:08 AM IST