rajini will not join with you if u want you join with rajini says thamilaruvi maniyan
தமிழக அரசியலில் ரஜினியுடன் தான் கமல் இணைந்து செயல்பட வேண்டும்; கமலுடன் ரஜினி இணையத் தேவையில்லை என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அரசியலுக்கு வருவதை உறுதிசெய்துவிட்ட ரஜினி, அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
எனவே திராவிட கட்சிகளை தமிழகத்திலிருந்து அகற்ற ரஜினியின் தலைமையை ஏற்று அவருடன் கமல் இணைந்து செயல்பட வேண்டுமே தவிர கமலுடன் ரஜினி இணைய தேவையில்லை என தெரிவித்தார்.
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார் எனவும் ரஜினியுடன் அரசியல் பேசவும் அவர் விரும்பினால் தன்னுடன் இணைத்துக்கொள்ளவும் தயார் எனவும் கமல் அண்மையில் பேசியிருந்த நிலையில், தமிழருவி மணியன் இப்படியொரு தடாலடி கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
