நடிகர் ரஜினிகாந்தின் குரல் பாஜகவின் குரலாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார் . பெரியார் சர்ச்சையை தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ரஜினி பேசியிருப்பதற்கு திருமாவளவன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் . ஆன்மீக அரசியல் என அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் என கூறி வருகிறார் , இதற்கிடையில்  பாஜக கொண்டு வரும்  திட்டங்களுக்கும் ரஜினி முன்வந்து ஆதரவாக பேசி வரும் நிலையில் அவர் மீது பாஜக மற்றும் இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டுள்ளது . 

இதற்கிடையில் அவர்  கொடுக்கும் பேட்டிகள் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது ,  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  சம்பவம் குறித்து தெரிவித்த கருத்து ,  திருவள்ளுவருக்கு காவி உடை குறித்த விவகாரம்,   பெரியார் -  ராமர் குறித்து பேசியது என அனைத்துமே தமிழக அரசியலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களாக இருந்ததுடன் ,  ரஜினிக்கு எதிராகவும் மக்களை திசை திருப்ப வைத்துள்ளது .  இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு இதுவரை தனக்கு சம்மன் வரவில்லை ,  சம்மன் வந்தால் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றார்.    மத்திய அரசு கொண்டுவந்துள்ளதேசிய குடிமக்கள் பதிவேடு நாட்டிற்கு அவசியமான ஒன்று , அதேபோல்  மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வரும் என்றார். 

இந்திய குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என்பது வதந்தி ,   அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர் .  திட்டமிட்டு பீதி கிளப்பி வருகின்றனர் என தெரிவித்திருந்தார் .  ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ,  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளுக்கு மிகுந்த எதிர்ப்பு நிலவிவரும் நிலையில் ரஜினியின் கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  ரஜினியில்  இக்கருத்துக்கு அரசியல் கட்சியினரும் , நெட்டீசன்களுக்  கடுமையாக விமர்சித்து வரும் நிலையில்  ரஜினிக்கு கருத்துக்கு பதிலளித்துள்ள திருமாவளவன் , ரஜினியின் குரல் பாஜகவின் குரலாக உள்ளது , அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே ரஜினி தன்னை அடையாளப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறார் என விமர்சித்துள்ளார்.