Asianet News TamilAsianet News Tamil

‘கேட்டை ஆட்டவேண்டாம்’...தமிழருவி மணியனை நோஸ்கட் பண்ணி தரமான சம்பவம் செய்த ரஜினி...

ரஜினி இமயமலைக்கே போனாலும் அவரது வீட்டு கேட்டுப் பக்கம் லேசாய் எட்டிப்பார்த்துவிட்டு ’இதோ வந்துட்டாரு’ என்று சில காலமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியனின் மூக்கை அறுத்து செம சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

rajini to avoid bye elections also
Author
Chennai, First Published Mar 10, 2019, 3:57 PM IST


ரஜினி இமயமலைக்கே போனாலும் அவரது வீட்டு கேட்டுப் பக்கம் லேசாய் எட்டிப்பார்த்துவிட்டு ’இதோ வந்துட்டாரு’ என்று சில காலமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் தமிழருவி மணியனின் மூக்கை அறுத்து செம சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.rajini to avoid bye elections also

சமீப காலமாக ரஜினிக்கு வால்பிடித்துக்கொண்டு அரசியலில்  அடுத்த காந்தி, நேரு, காமராஜர் என்று அவருக்கு துதி பாடுவதையே தனது ஃபுல்டைம் வேலையாக கொஞ்சமும் போரடிக்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரஜினி அறிவித்ததும் இந்த பதுங்கலானது சட்டமன்றத் தேர்தலில் பாய்வதற்குத்தான் என்று  அசால்ட் பேட்டி அளித்தார்.rajini to avoid bye elections also

இதுகுறித்து நேற்று மாலை  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தமிழருவி மணியன், ’’என்றைக்கு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார். களத்தில் நிற்பார். வாக்காளர்களை சந்திப்பார். ரஜினிகாந்த் ஓராண்டாக வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. ஓராண்டாக தமிழகம் முழுவதும் இருக்கிற ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் கடுமையாக களப்பணியாற்றி 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி என்று சொல்லப்படுகிற வாக்குச்சாவடிகளில் ஆட்களை நியமிப்பதற்கான வேலைகளை செய்து முடித்திருக்கிறார்கள். மக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். 

ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை என்னென்ன என்பது குறித்தான தெளிவான பாதையோடு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு அரசியல் கட்சியை தொடங்கும்போதே அந்த கட்சிக்கான பெயர், சின்னம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, வாக்காளர்களை சந்திக்கும்போது என்னென்ன கொள்கைக்கு தங்களை முன்னெடுத்து வைப்பது, தேர்தலை அறிக்கையாக எதைத் தருவது என்பது உள்பட இந்த ஓராண்டு காலத்தில் எல்லா நிலைகளிலும் வேகமாக ஆரவாரம் இல்லாமல் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் ரஜினியின் அரசியல் பாணி’ என்று சகட்டுமேனிக்கு சவடால் விட்டார்.rajini to avoid bye elections also

அந்தப் பேட்டியின் ஈரம் காய்வதற்குள் தமிழருவி மணியனின் மூக்கை அறுப்பதுபோல் ‘வரும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடப்போவதில்லை’ என்று துண்டை உதறித் தோளில் போட்டுவிட்டுப்போய்விட்டார் ரஜினி.ஆனால் பாவம் ரஜினி வீட்டுக்குள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே அவரது கேட்டை விடாமல் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறார் தமிழருவி மணியன்.

Follow Us:
Download App:
  • android
  • ios