சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ஆலோசனைக்கும் பின் அவர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல என்றார்.

2017-ல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன். நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம், பதவியை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடலாம் என்றார்..

சட்டசபை தேர்தல் முன்கூட்டி வர வாய்ப்பு இல்லை. இப்போதைக்கு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சி அதற்கு தேவையானவற்றை எல்லாம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடும். தற்போது நமது இயக்கத்தில் 50 சதவீதம் பூத் கமிட்டி வேலை முடிந்து இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலை சந்தித்து எதிரணிக்கு வெற்றியை உருவாக்கி கொடுத்துவிடக்கூடாது என கூறினார்..

சட்டமன்ற தேர்தல் 2021-ல் நடைபெற உள்ள நிலையில், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் தனிக்கட்சி தொடங்குவோம். அப்போது கட்சியை தொடங்கினாலும் தேர்தலை சந்திப்பதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. ஒருவேளை அரசியல் சூழ்நிலை காரணமாக முன்கூட்டியே கட்சியை தொடங்க வேண்டியது ஏற்பட்டால் அதற்கும் தயாராகுவோம் என்று ரஜினி அதிரடி காட்டினார்..

நாம் தனிக்கட்சி தொடங்கும்போது  பல முக்கிய தலைவர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்முடன் இணைவார்கள் என தெரிவித்த ரஜினி நீங்கள் எதிர்பாராத பெரிய தலைவர்கள் எல்லாம் கூட நம்முடன் வருவார்கள் என ஒரு டுவிஸ்ட் வைத்தார்.

2021  சட்டசபை தேர்தலில் நாம் நிற்கிறோம். அடிக்கிறோம். ஜெயிக்கிறோம் என ரஜினி அவரது ஸ்டைலில் பேசியது அவரது ரசிகர்களை உற்சாகமடையச்  செய்தது. ஏற்கனவே ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ரஜினியுடன் இணைந்து செயல்பட உள்ளனர்.

இதே போல் வட மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய திமுக பிரமுகர் ஒருவரும் ரஜினியுடன் இணைய காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததில் சற்று சுணங்கிய அவரது ரசிகர்கள் சட்டப் பேரவை தேர்தல் குறித்து பேசியது அவர்களுக்கு பூஸ்ட கொடுத்தது போல் ஆகிவிட்டது,.