Rajini support for Modi cleanliness project
சூப்பர்ஸ்டார் ரஜினி தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'காலா' படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கபாலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கசக்கமாக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையே சேவை திட்டத்துக்கு தனது ஆதரவை அளிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் " நமது பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கப்பட்டுள்ள தூய்மையே சேவை இயக்கத்துக்கு என்னுடைய முழு ஆதரவை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மையே கடவுளுக்கு நிகரானது" என தெரிவித்துள்ளார்.
I extend my full support to our hon. Prime Minister @narendramodi ji’s #SwachhataHiSeva mission. Cleanliness is godliness.
— Rajinikanth (@superstarrajini) September 22, 2017
கமல் அரசியல் பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கு ரஜினி ஆதரவு அளித்துள்ளது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
