அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து கேப்டன் விஜயகாந்த் திரும்பி ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், அவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், தி.மு.க. தலைவர் ரஜினிகாந்தும் சந்தித்திருப்பது வலைதளங்களில் வச்சு செய்யப்படுகிறது.

இன்று காலை விஜயகாந்தை சந்திக்க வந்த ரஜினி வெளியே காத்திருந்த நிருபர்களிடம் ‘அரசியல் எதுவும் பேசவில்லை. நான் உடல்நலம் குன்றியிருந்தபோது விஜயகாந்த் என்னிடம் அக்கறையுடன் நலம் விசாரித்தார். அது போன்ற ஒரு சந்திப்புதான் இது’ என்று மழுப்பி விடைபெற்றார். ஆனால் அச்சந்திப்பு, பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்தைக் கோர்த்துவிடுவதற்காக தூது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

அச்சந்திப்பு நடந்து முடிந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலினும் கேப்டனை சந்தித்துவிட்டு ரஜினி ஓட்டிய அதே தேய்ந்த ரெகார்டை ஓட்டி முடித்துவிட்டு, ‘விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பீர்களா? என்கிற கேள்விக்கு ‘உங்க நல்ல எண்ணத்துக்கு பாராட்டுகள்.நன்றி’ என்று தனது உள்மன ஆசையை வெளியிட்டார்.

கேப்டனின் உடல்நலம் குறித்து, அவர் சென்னை திரும்பி ஒரு வாரகாலம் ஆகியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட திடீர் அக்கறையை வலதளவாசிகள் வெகுவாக விமர்சித்து வருகிறார்கள்.