நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு உள்ளவரும், சூப்பர் ஸ்டாரின் நண்பருமான கராத்தே தியாகராஜன் உறுதி தெரிவித்துள்ளார்.

 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாக அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போக்குக் காட்டி வந்தார். இந்நிலையில், ஜெயலலிதா- கருணாநிதி மறைந்ததை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தை ஆரம்பித்து மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்தார். ரஜினி மக்கள் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மன்றத்தை அறிவிக்கும்போதே 2021ல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்து இருந்தார். இடையில் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வந்ததால் அரசியலுக்கு வருவாரா? தனியாக கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது பாஜகவில் இணைவாரா? என்கிற குழப்பங்கள் நீடித்து வந்தது.

 

இந்நிலையில் அவர் தனியாக கட்சி ஆரம்பிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து ரஜினியின் 25 ஆண்டுகால நண்பரான கராத்தே தியாகராஜன், ‘’ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார். வரும் மார்ச் மாதத்திற்குள் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்’ என உறுதி படத் தெரிவித்துள்ளார். 

இவரது கூற்றின்படி ரஜினி பாஜகவில் இணையாமல் தனிக் கட்சி தொடங்க உள்ளது தெளிவாகி உள்ளது.