உண்மையான சூப்பர் ஸ்டார் யாரென்றால் ரஜினி கிடையாது இப்போது விஜய் தான் என காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடா்பாளா் திருச்சி இ. வேலுச்சாமி பேசிய வீடியோவில், ‘’சில நேரத்தில் பாருங்க சில நல்லது நடக்குது. நேற்று வரை இவர்தான் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்னு டிவி எல்லாம் சொல்லுச்சு. இவர் படம் நடிச்சா ஐநூறு கோடி, ஆயிரம் கோடி சம்பாதிப்பார்கள் என செய்தி தாள்கள் கூறின. நானும் நம்பினேன். ஆனால், பாருங்க அவன் ஒன்னு நினைக்க, அவன் ஒண்ணு நினைச்சிட்டான்.

 

நம்ம தம்பி விஜயை போய் தூக்கிட்டு வந்து விசாரித்தானா? நானா சொல்லல. இன்கம்டாக்ஸ் ஆபீஸர் சொல்றான் ‘விஜய் நடித்த பிகில் பட வசூல் 300 கோடினு சொல்றாங்க. ஆனால் அதை தாண்டி 500 கோடி வசூல் பண்ணி விட்டது எனச் சொல்கிறார்கள். ஆனால் இந்த சூப்பர் ஸ்டா நடித்த தர்பார் படம் அய்யோ நஷ்டமாயிடுச்சே காப்பாத்துங்கனு விநியோகஸ்தர்கள் எல்லாம் கதறுகிறார்கள்.  அப்படி என்றால் இப்போது உண்மையான சூப்பர் ஸ்டார் விஜய். இதை நான் சொல்லவில்லை இன்கம்டாக்ஸ் ஆபீஸர் சொல்றான்’’ என அவர் பேசிய வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.