குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தஅச்சுறுத்தலும் இல்லை. அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காகாக தூண்டி விடுகிறார்கள். இந்த நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.மாணவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிகள் மாணவர்களை பயன்படுத்த பார்ப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பாராட்டி இருக்கிறார்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தந்து வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது, "குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தஅச்சுறுத்தலும் இல்லை. அரசியல் கட்சியினர் சுயலாபத்திற்காகாக தூண்டி விடுகிறார்கள். இந்த நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்.மாணவர்கள் சிந்தித்து செயல்படவேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிகள் மாணவர்களை பயன்படுத்த பார்ப்பார்கள்" என்று கூறியிருந்தார்.
டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, "நடிகர் ரஜினிகாந்த், சிஏஏ விவகாரத்தில் சரியான கருத்தை பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதமர் மோடி, மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், இந்துக்கள் அல்லாதவர்களூக்கு குடியுரிமை பறிக்கப்படும் என்று அவர் சொல்லவில்லை.சிஏஏ சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டிருக்கிறது. யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை" என்றார்.
TBalamurukan
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 5, 2020, 11:17 PM IST