இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைக்கா நிறுவனம் இலவசமாக 150 வீடுகள் கட்டியுள்ளது. வீடு வழங்கும் விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் வீடு வழங்கும்படி சிறப்பு அழைப்பாளராக அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த் வீடு வழங்கும் இலங்கை வருவதாக ஒப்புக்கொண்டார். இதனிடையே ரஜினிகாந்த் இலங்கை செல்ல கூடாது என்று ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறுகையில் இலங்கைக்கு  ரஜினிகாந்த் செல்லாதது மனவருத்தத்தை அளிப்பதாகவும் தமிழர்கள் 150 வீடுகள் கட்டி ரஜினியின் வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கும் போது அவர் அங்கே செல்லாதது தமிழர்களை இழிவுபடுத்துவதுடன் புறக்கணிப்பதாக இருப்பதாக கூறினார். 

யார் அந்த வீட்டை கட்டினார்கள், எதுக்கு அழைத்தார்கள் என்றும் தெரியாமல் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டிய ஒரு நிகழ்ச்சியை புறக்கணித்து இருப்பது தமிழர்களை வேதனைபடுத்தும் செயல் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.