Rajini illiterate Rajini is a total loss to all by subramanian swamy
படிப்பறிவே இல்லாத இந்த ரஜினி கூடயெல்லாம் கூட்டணி வைத்தால் மொத்தமாக நாசமாகிவிடும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாபம் விட்டுள்ளார்.
பல வருடமாக அதோ இதோ என டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் ஒரு வழியாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனாலும் இன்னும் தொடங்கவில்லை, தொடங்கும் தேதியையும் இதுவரை சொல்லவில்லை. இந்நிலையில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியோ மோடியுடன் இணைந்தால் ரஜினிகாந்த் முதல்வராகிவிடுவார் என கூறிவருகிறார்.
ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை பேசுவதால் பாஜகவுடன் கூட்டணி சேருவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தையும் குருமூர்த்தியையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சாடி வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படி ஒரு போஸ்ட்டிங்கே இல்லை, வேண்டுமானால் ரஜினிகாந்துக்கு பி.ஆர்.ஓ. என கூறலாம் என கலாய்த்துள்ளார்.
இந்நிலையில் இன்று முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் படிப்பறிவே இல்லாதவர், நடிகர்கள் அரசியலில் கோலோச்சலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது. இந்த மாதிரி ஆட்களுடன் கூட்டணி வைத்தால் மொத்தமாக நாசமாகிவிடும் என பாஜகவிற்கு சாபமிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
