காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம் நடத்தியபோது, போராட்டத்துக்கு வராமல் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்த உங்களை (ரஜினி) நம்பி எப்படி தமிழ்நாட்டை ஒப்படைப்பது? என்று இயக்குநர் பாரதிராஜா நூல் வெளியீட்டு வி ஒன்றில் பேசியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில், சிறை கைதி ரவிசந்திரன், ராஜீவ் காந்தி படுகொலை சிவராசன் டாப்சீக்ரெட் என்ற நூல் வெளியீட்ட விழா நடைபெற்றது.

நேற்று மதுரையில் நடந்த விழாவில் ராஜீவ் காந்தி படுகொலை சிவராசன் டாப்சீக்ரெட் புத்தகத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையிலும், தீவிர சிகிச்சை பிரிவிலும் உள்ளதுபோல் உள்ளது. தமிழகத்தில் ஒற்றுமை இல்லாததால், பிரிவினை சக்திகள் பின்வாசல் வழியாக நுழையப் பார்க்கின்றன என்றார்.

தமிழர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தைவிட்டு தமிர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டால் எந்த சக்தியாலம் தமிகத்தை ஒன்றும் செய்ய முடியாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய சடட்ப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் பயணிப்பதாக கூறும் இபிஎஸ், ஓபிஎஸ் இரும் இந்த 7 பேரையும் விடுதைலை செய்யட்டும். நான் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத்தயார். 

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இருவரும் ப்யூஸ் போன பல்ப்புகள். மத்திய அரசு என்ற பல்ப்பின் வெளிச்சத்தின்கீழ் இருப்பதால் இரண்டு பல்ப்புகளும் எரிவதுபோல் தெரிகிறது. இப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது; அதை நிரப்பப்போவதாக பலரும் கூறி வருகின்றனர். ரஜினி, கமல் நல்லவர்கள். இவர்கள் கட்சி தொடங்குவதற்கு இப்போது என்ன அவசியம் வந்துவிட்டது? 25 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். இறந்தபோது, வெற்றிடம் ஏற்பட்டது. வேதம்புதிது படம் ரிலீஸ் ஆன நேரம். அப்போது ரஜினி, கமலை நான் அரசியலுக்கு வரச்சொன்னேன். மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம்; அரசியல் செய்யலாம். ஆனால், தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குபவர்களாகவும், அமைச்சர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்கலாம். தலைமை பொறுப்புக்கு வர ஆசைப்படக் கூடாது.

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ் திரையுலகத்தினர் நடத்திய நெய்வேலி போராட்டத்துக்கு ரஜினி வரவில்லை. கமல் ஊர்வலத்தக்கு வந்தார். ரஜினி எனது நண்பர்தான். நட்பு ரீதியில் ரஜினி அற்புதமான மனிதர். ஆனால், நட்பு என்பது வேறு; கொள்கை என்பது வேறு. நெய்வேலி போராட்டத்துக்கு நடிகர்கள் செல்லக் கூடாது என்றார்.

நாங்கள் நெய்வேலியில் போராடிக் கொண்டிருந்தபோது, அவர் மட்டும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலி போராட்டத்துக்கு வராமல் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்த உங்களை நம்பி எப்படி தமிழ்நாட்டை ஒப்படைப்பது? காவிரிமேலாண்மை வாரியம் வேண்டும் என்று சொல்லுங்கள். இல்லை காவிரி நீரில் தமிழகத்துக்கு பங்கு உண்டு என ஒற்றை வார்த்தைக் கூறுங்கள் பார்க்கலாம் என்று கேள்வி
எழுப்பினார்.

தமிழகத்துக்காக எதையும் செய்யாதபோது அப்படி என்ன தமிழகத்தைக் காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. ஒற்றுமையாக இருந்து இதை முறியடிக்கணும். ரஜினி கமலக்கு, காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? தமிழகத்தின் நிலப்பரபு சரியாக தெரியாது. தமிழகத்தில் எவ்வளவு நதி, அணைகள் உள்ளது என தெரியாது. தமிழகத்தின் வரலாறு தெரியாது. கட் அவுட்டுக்கு பால்
அபிஷேகம் செய்து கெட்டு குட்டிச்சுவராகிப் போனோம். குஷ்புக்கு கோயில் கட்டுகிறார்கள் முட்டாள்கள். எனவே விழித்தெழு; விழித்தெழப்பார். ஒற்றுமையாக இருந்து சதிகளை முறியடிப்போம் என்று பாரதிராஜா பேசினார்.