நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. 

 

ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ளார். அரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கான தேதி டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

கட்சியின் சின்னமாக பாபா முத்திரை கேட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அவருக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கட்சி உரிமையாளர் முகவரியில் எர்ணாவூர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சியின் சின்னமாக பாபா முத்திரை கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.