பெரியாரை அவமதித்த ரஜினிகாந்த் இனி தமிழகத்தில் நடமாட முடியாது. உயிரோடு விடமாட்டோம் என பெரியார் ஆதரவாளர்கள் பகிங்க மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

கடந்த இரு தலைமுறைகளாக இந்து கடவுள்களை அவமதித்து, சிலைகளை உடைத்து வரும் பெரியாரின் ஆதரவாளர்கள், ரஜினி பேசிய ஒரே ஒரு விமர்சனத்தை தாங்க முடியாமல் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட பெரியார் ஆதரவு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, ’’ரஜினி பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர் வீட்டை முற்றுகை இடுவோம். தமிழகத்தில் அவரது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவோம்.

 

ரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம்’’ என்று பெரியார் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து எந்த அரசியல் அமைப்புகளும்  இதனை கண்டிக்கவில்லை. காலங்காலமாக கோடிக்கணக்கானோர் வணங்கும் இந்து கடவுள்களை இவர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் இவர்கள் மதிக்கும் ஒருவரை யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்பது என்னவிதமான சமூக நீதி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.