2021ல் தமிழ்நாட்டில்  ராமதாஸும், ரஜினிகாந்தும் மிக பெரிய அவமானமான தோல்வியை சந்திக்கப்போகிறார்கள் என தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

தர்மபுரி தொகுதியை சேர்ந்த திமுக எம்.பி ட்விட்டர் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர். ட்விட்டர் பக்கத்தில் சம்பந்தப்பட்டவர்களை டேக் செய்து நேரடியாக கேள்வி எழுப்பி விமர்சிப்பது அவரது வாடிக்கை.

 

இந்நிலையில் அவர், ’ஒரு குட்டி உண்மை கதை சொல்லட்டுமா? 2021ல் தமிழ்நாட்டில் இரண்டு பேர் மிக பெரிய அவமானமான தோல்வியை சந்திக்கப்போகிறார்கள். இந்த அவமரியாதையை உங்களுக்கு அளிக்க போவது அர்ஜுனன்/ கிருஷ்ணர் (மோடி- அமித்ஷா) என்று நீங்கள் நம்பும் இருவர். டெல்லியில் செய்ததை விட மிக சிறப்பாக செய்வார்கள்’எனப் பதிவிட்டுள்ளார். அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினிகாந்த் இருவரது ட்விட்டர் அக்கவுண்டையும் டேக் செய்துள்ளார்.  

இதையும் படிங்க:- மசூதிகளில் அரேபிய மொழியில் நமாஸ் செய்யக்கூடாது என போராட முடியுமா..? திக- திமுகவுக்கு ஹெச்.ராஜா கேள்வி..!

இதற்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், 'கூட்டணி கட்சி காங்கிரஸ் டெல்லியில் கேவலமான தோல்வி. உங்களின் கருத்து என்னங்க சார்? இதே ராசி 2021 சட்டமன்ற தேர்தல் வரை இருக்கும். திமுக கடைசி வரை எதிர்க்கட்சி. உங்கள் பதவியும் இது தான் கடைசி. அனுபவித்து கொள்ளுங்கள். இதை சொல்வதற்கு மன்னிக்கவும். ஆனால் அது தான் உண்மை’ எனக் கூறியுள்ளார்.

 

 

இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை கூட்டணி பத்தி தலைவர் ஏதும் அதிகரபூர்வமாக சொல்லவில்லை. ஏதோ ஓரத்தில் கசிந்த விஷயத்தை வைத்து கொண்டு சம்மந்த பட்ட இரண்டு பேரையும் டேக் செய்து பதிவிடுவது ஒரு விதமான நூதன பயம். பயத்துக்கு பாஷை கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.

1996ல் அவர் இல்லனா நீங்க ஆட்சியில் இல்லை.அதுக்கு பிறகு தனி மெஜாரிட்டி இல்லை.10 வருடமா ஆட்சியில் இல்லை.சென்றமுறை எதிர்க்கட்சி கூட இல்லை.நீ வந்து இன்னும் கட்சியே ஆரம்பிக்காத ஒருவரை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் என்றால் யாருக்கு யார் மேல பயம்இதுவே அவருக்கு கிடைத்த முதல் வெற்றி. டெல்யில் காங்கிரஸ் படுதோல்வி? ராகுல்  அழுகை. ஆம் ஆத்மி க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின். இன்னும் கட்சியே தொடங்காத ரஜினி, ஆனால் அவரை கண்டு நடுங்கி பிரசாந்த் கிஷோருடன் திமுக கூட்டு’’ என பலரும் எதிர்கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க:- சுய லாபத்திற்கு ரசிகர்களை பயன்படுத்தும் விஜய்... செஃல்பி எடுத்து அரசை மிரட்டியது சரியா..?