பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு நாசுக்காக கேட்டுட்டு இப்படி செஞ்சது நியாயமா? அன்புமணியை அந்த கட்சியிலிருந்து வெளியே வந்த ராஜேஸ்வரி பிரியா நார்நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முக்கிய நிர்வாகிகளான ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தனர் ஆனால் முதல் முதலில் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியவர் ராஜேஸ்வரி பிரியா தான்.

பாமகவில் இருந்து விலகிய இவர், வேறொரு கட்சியில் சேராமல் அனைத்து மக்கள் அரசியல் கட்சியை தொடங்கிய இவர், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தொப்பி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டார்.

இந்நிலையில், சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலத்தில் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்; ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக தெரிந்தால்கூட அந்த தொகுதி தேர்தலையே ரத்து செய்ய வேண்டும். அது எப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் ரத்து செய்கிறார்கள்? இது எல்லாமே வெறும்  கண்துடைப்பு தான். முழுமையாக அநீதிக்கு ஓரளவு நடவடிக்கை எடுத்துவிட்டு, நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கண்துடைப்பு செய்கிறார்கள். 

தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்று சொல்லியிருக்கிறார்கள். தருமபுரியில் எல்லா வாக்குச்சாவடியிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆனால், கண்துடைப்புக்காக  வெறும் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு என்று அறிவித்திருக்கிறார்கள். தர்மபுரி தொகுதியில் மீண்டும் தேர்தல் வைக்க வேண்டும். ஏனென்றால் அன்புமணி அவரது தொண்டர்களையே தூண்டிவிட்டிருக்கிறார். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். பூத்தில் நம்மதான் இருக்கப்போறோம். புரியுதா, புரியுதான்னு நாசுக்காக கேட்டிருக்கிறார். 

அதுவும் தேர்தல் ஆணையத்திற்கு புகாராக போயிருக்கிறது. ஆனால் அவர்களும் விட்டுவிட்டார்கள். இதெற்கெல்லாம் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லையா? இது தான் ஜனநாயகமா? முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் தொண்டர்களை தூண்டிவிடுவது எந்த விதத்தில் நியாயம் ? என அன்புமணியை அந்த கட்சியிலிருந்து வெளியே வந்த ராஜேஸ்வரி பிரியா நார்நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார்.