அதிரடிக்கு பெயர் போன அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சரமாரியாக புகழ்ந்து தள்ளி உள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் வைகோ பேசிய பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்லலாம்.  காரணம் கூட்டணி கட்சியின் முக்கிய உறுப்பினரான காங்கிரஸ் கட்சியை தான் அவர் போட்டு தாக்கி விட்டார்.  இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் வைகோ ஏற்பட்டுள்ள லடாய் ஊர் அறிந்த விஷயமாகும்.

வைகோவின் இந்த பேச்சு,  பாரதிய ஜனதா கட்சியினரும் அதிமுகவினறையும், குஷி படுத்தி உள்ளது.  இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு விழா ஒன்றில் கலந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி வைகோ குறித்து, பல வெளிப்படையான தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

வைகோவை பொருத்தவரை, அவர் மனதில் பட்டதை பட்டு பட்டு என பேசிவிடுவார்.  அதேபோன்று எதிரில் நிற்பவர் யார் என்றும் பார்க்க மாட்டார் அநீதி என்றால் உடனடியாக யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தட்டிக்கேட்கும் நல்ல தலைவர்தான் வைகோ.  என ராஜேந்திர பாலாஜி அதிரடியாக புகழாரம் சூட்டினார்.  ராஜேந்திர பாலாஜியின் இந்த புகழ்ச்சியை பார்த்த செய்தியாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் சற்று ஆடித்தான் போனார்கள் . 

அதோடு நிற்காமல்,  வைகோ மீது தமக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும்,  வைகோவின் அருமையான தைரியமான இந்த பேச்சுதான் அவரது வளர்ச்சிக்கும் காரணம், வீழ்ச்சிக்கும் காரணம் என ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தைரியமாகவும் தெளிவாகவும் வைகோ மீதான தனது கருத்தை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.