Rajendra Balaji says that Jayalalitha died on Dec 4 at 5.20 pm

ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் கிளப்பியுள்ளார்.

மன்னார்குடியில் தினகரன் அணி சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய திவாகரன், “ ஜெயலலிதா 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார் ஒரு பகீர் செய்தியை வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியபோது, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி அம்மா இறந்து விட்டார் என்ற தகவல் தெரிந்தது. அந்து மாலை அப்பல்லோவிலிருந்து எனக்கு நெருங்கிய நம்பர் ஒருவர் போன் செய்தார். அப்போது அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். நானும் பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். ஆனால் யாருமே எடுக்கவில்லை. இதனால் ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் பூங்குன்றனுக்கு போன் போட்டேன் அவரும் எடுக்கல. எனக்கு தெரிந்தவருக்கு போன் போட்டு அவரிடம் கொடுக்கச் சொன்னேன். அப்போது அவர் கதறி அழுதார்.

அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொன்னார். அப்போதே சென்னைக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தேன்.

மீண்டும் அதிகாலை 2 மணிக்கு தலைமை கழகத்திடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் உடனடியாக சென்னைக்கு கிளம்பி வரவேண்டும் என்றார்கள். அப்போதே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றவுடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாக காலை 11 மணிக்கு எனக்கு தகவல் சொன்னார்கள். அதற்கு முன்பே அவர் மருத்துவ ரீதியாக இறந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதாவின் மரணம் ஏற்கெனவே மர்மமாக இருக்கும் நிலையில் தற்போது இதேபோல பகீர் தகவல்களை அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை இப்போது கூறிவருகின்றனர்.

இப்போது இந்த தகவலை சொல்லும் இவர்களே ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களில் இறுதியாக ஒரு நாளுக்கு முன்னர் வரை சி.ஆர். சரஸ்வதி துவங்கி பொன்னையன் என தம்பிதுரை ஒவ்வொருத்தரும் அம்மா இட்லி சாப்பிட்டார், பொங்கல் சாப்பிட்டார், எங்களைப் பார்த்து கையசைத்தார் என நாளுக்கு நாள் ஓவ்வொரு கதை சொன்ன இந்தே அமைச்சர்களும் தொண்டர்களும் அப்போது இந்த கதையை சொல்லாமல் இப்போது சொல்ல காரணம் என்னவோ?