இந்த வீரமணிக்கு தான் என்ன கொள்கை இருக்கிறது? இப்படியே பேசிக்கொண்டிருந்தாள் அவருடைய வாயைப் பசை வைத்து ஒட்ட வேண்டும் என ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

சிவகாசியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி; அண்ணாவின் கொள்கை எதனை நாங்கள் காற்றில் பறக்கவிட்டோம்? கி.வீரமணி கடவுள் இல்லை என்கிறார். நாங்கள், கடவுள் இருக்கிறார் என்று சாமி கும்பிடுகிறோம். எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோவிலில்போய் சாமி கும்பிட்டார். அண்ணா மீதுள்ள மரியாதையில் அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். 

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் அண்ணாவும் சொன்னார். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. மக்கள் நலமாக இருக்கவேண்டும் என்று யாகம் நடத்துகிறோம். கி.வீரமணி போன்றவர்களுக்கு எங்களைக் கிண்டலடிப்பது, கேலி பேசுவவது வாடிக்கையாகப் போய்விட்டது. அவருக்கு இதுவே ஒரு தொழிலாகிவிட்டது. ஜெயலலிதாவும் திருப்பதி போனார். எல்லா கோவில்களுக்கும் போனார். நாங்களும் வெள்ளிக்கிழமை என்றால் கோவிலுக்குப் போகிறோம். கோவிலுக்குப் போவது எங்களுடைய இயல்பு.

தி.க.வுக்கு என்ன கொள்கை இருக்கிறது? இல்ல இந்த வீரமணிக்கு தான் என்ன கொள்கை இருக்கிறது? அவருக்கு இந்துக்களை அழிக்கவேண்டும். இந்துக்களை ஒழிக்க வேண்டும். இந்துக் கடவுள்களை அழிக்க வேண்டும் என்பதுதான் மட்டும் தான் அவருடைய கொள்கையாகி இருக்கிறது. அவருக்கன்று வேற கொள்கையே கிடையாது எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. அதனால் தான் அவர் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார். இப்படியே பேசிக்கொண்டிருந்தாள் அவருடைய வாயைப் பசை வைத்து ஒட்ட வேண்டும். நாங்க சாமி கும்பிடுவோம். வீரமணி பேச்சைக் கேட்கமாட்டோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.