கொரோனாவோடு வாழக்கற்றுக்கொள்ளுங்கள் என்று உலக சுகாதாரநிறுவனம் அறிவித்துள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

 உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கி போய் இருக்கிறது. இந்த ஊரடங்கால் விமானம் ரயில் பேருந்து போக்குவரத்து ஆகியவை நிறுத்தப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் எந்த போக்குவரத்து இயங்காமல் இருந்த நிலையில் ரயில் போக்குவரத்து மட்டும் அடுத்த வாரம் இயங்க இருக்கிறது.
 ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.மே 12, செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவுகள், நாளை, திங்கள்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.ஐஆர்சிடிசி இணைய தளத்தில் மட்டுமே பயணத்துக்கான முன்பதிவுகள் செய்ய முடியும்.முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்.20,000 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.டெல்லிக்கும் 15 முக்கிய நகரங்களுக்கும்  பயணிகள் ரயில் இயக்கப்படும்.


இந்த சிறப்பு ரயில்களில் முகக் கவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கரோனா தொற்று இருப்பவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, செகந்திராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், மும்பை, ஆமதாபாத், ஜம்மு - தாவி போன்ற நகர்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.நீண்ட நாள்களாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இப்போக்குவரத்தைத் தொடங்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குறைந்த அளவிலான ரயில்களே இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.