சிக்கப்போகும் முக்கிய அரசியல் புள்ளி..! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது மத்தியில் ஆளும் பாஜக. இது ஒருபக்கம் இருக்க குறிப்பாக தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக உடன் கூட்டணி வைத்து பாஜக சார்பாக ஐந்து தொகுதிகளில் போட்டியிடபட்டது. இருந்தபோதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. திமுக பொறுத்தவரை மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றியது. அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதாவது அதிமுக சார்பில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கைப்பற்றியது. 

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில், ஆளும் அதிமுக பெரும் தோல்வியை தழுவியது என்றே கூறலாம். அதேவேளையில் திமுக 37 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் இதனால் பெரும்பயன் ஒன்றும்  இல்லாத நிலையே உருவானது. 

அதன்படி பார்த்தால், திமுக 37 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் எந்த பயனும் இல்லாத சூழல் உருவாகி இருந்தது. காரணம் தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் நாற்பதும் நமதே..  நாம் யாரை கை காட்டுகிறோமோ அவர் தான் அடுத்த பிரதமர் என்ற பாணியில் திமுக பிரச்சாரத்தை முன்வைத்து வந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று யாருடைய ஆதரவும் இல்லாமல் மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதேவேளையில் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் போராடி வரும் இந்த தருணத்தில் அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது காரணம்... எடப்பாடி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தேவையான 9  சீட்களை இடைத்தேர்தலில் தட்டி சென்று எப்படியோ ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தற்போது இதற்கு ஆப்பு வைக்கும் வண்ணமாக ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகளில் ஒரு சிலர் பல கோடிகளில் ஊழல் செய்திருப்பதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளது. இதற்காக அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும் ஆரணியில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளாராம் அந்த அரசியல் புள்ளி. ஆளும் அதிமுகவில் முக்கிய அரசியல் புள்ளியாக  வலம் வரும் மற்றொருவரும் பல கோடியில் ஊழல்செய்து இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இதில் சிக்கப் போகும் அந்த முக்கிய புள்ளி யார் என்றும் பல கோடிகளில் ஊழல் நடந்திருப்பது பற்றியும் முழு அறிக்கையை உளவுத்துறையினர் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளதாம்.

மேலும் இது தொடர்பாக விரைவில் ரெய்டு நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அவ்வாறு ரெய்டு நடத்தப்பட்டு சில அரசியல் புள்ளிகள் சிக்கினால், ஆளும் அதிமுகவுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என காத்திருக்கின்றனர் விவகாரம் அறிந்தவர்கள்.