Mulayam singh in troble
முலாயம் சிங் வீட்டில் திடீர் சோதனை…அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கையிலெடுத்தாரா யோகி…
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் 4லட்சம் ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும் அவரது வீட்டில் மின்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்..
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் லக்னோ வீட்டில் மின் துறை அதிகாரிகள் இன்று திடீரென நுழைந்து ஆய்வு செய்தனர். இதில் மின் கட்டணமாக 4 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக கண்டு பிடித்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் வி.ஐ.பி.களுக்கு அரசு 5 கிலோவாட் மின்சாரம் அனுமதிஅளித்துள்ளது. ஆனால் முலாயம்சிங்கிற்கு 8 மடங்கு அதிகமாக 40 கிலேவாட் மின்சாரம் வழங்கி அனுமதியளித்துள்ளனர் என ஆய்வு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இதன் மூலம் மிகப்பெரிய மின் திருட்டு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளை கண்டறியவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறினர்.
ஆனால் இந்த மாதம் வரை பாக்கியின்றி மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சமாஜ் வாதி கட்சியினர், இது போன்ற நிகழ்வுகள் ஆளும் பாஜக வினரின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளனர்.
