கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்கு சென்ற போலீசாரை தடுத்து நிறுத்திய அதிமுக பிரமுகர்கள் அவர்களுடன் வக்குவதத்தில் ஈடுபட்டனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அவர்களை பெங்களூர் அக்ரஹார சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இதனிடையே சசிகலா தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாததால் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யபட்டார்.

இந்நிலையில் நேற்று எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதனிடையே கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான மதுரை தெற்கு மாவட்ட எம்.எல்.ஏ சரவணன்தா கடத்தி வைக்கபட்டிருந்ததாகவும், அங்கு இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாகவும், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏக்களை கடத்தியதாகவும், கொலை மிரட்டல், சிறை பிடித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கபட்டிருப்பதாக சொல்லபடுகின்ற கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று ஐ.ஜி செந்தாமரை கண்ணன், எஸ்.பி.முத்தரசி உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து விசாரணை செய்ய அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர்.

எம்.எல்.ஏக்களை ரிசார்டிலிருந்து காலி செய்யுமாறு உரிமையாளர் கூறிவிட்டதாகவும் ஆனால் எம்.எல்.ஏக்கள் காலி செய்ய மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.