எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்பதை ஆய்வு செய்ய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் போலீஸ் உயரதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதையடுத்து அமைச்சர் காரில் கட்சிகாரர்கள் தப்பி ஓடினர்.
சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்துள்ளார்.
எம்.எல்.ஏக்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக அடைத்து வைத்துள்ளதாக ஓ.பி.எஸ்ஸிடம் தஞ்சம் அடைந்த மனோரஞ்சிதம், சண்முகநாதன், ஆறுகுட்டி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் புகார் அளித்தனர்.

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏவுமான சண்முகநாதன் கமிஷ்னர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
நேற்று காலை டி.ஜி.பி, தலைமை செயலாளர், கமிஷ்னருடன் ஆலோசனை நடத்திய கவர்னர், எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து அறிக்கை தரும்படி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இன்று டி.எஸ்.பி., வட்டாட்சியர், அடங்கிய குழு கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதுதவிர, எம்.எல்.ஏ விடுதிக்கும், மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதன் அதிரடியாக அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு திடீரென போலீசார் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அமைச்சரின் கார் அங்கு நின்று கொண்டிருந்தது.
இதைபார்த்து அங்கு இருந்த சிலர் அமைச்சர் காரில் ஏறி தப்பி சென்றனர்.
பின்னர் போலீசார் தங்கள் சோதனையை முடித்து விட்டு சென்றனர்.
