Asianet News TamilAsianet News Tamil

அடேங்கப்பா...! இவ்வளவு கோடியா...? 187 இடங்களில் ரெய்டு வீண்போகல...! பகீர் தகவலை வெளியிட்டது ஐ.டி...! 

Raid in 187 places Rs. 4000 crore property document confiscated
Raid in 187 places Rs. 4000 crore property document confiscated
Author
First Published Jan 12, 2018, 6:07 PM IST


சசிகலா உறவினர் வீடு, அலுவலகங்கள் என மொத்த 187 இடங்களில் நடந்த ரெய்டில் ரூ.4,000 கோடி சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய 187க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது, எனினும் அதிகாரிகள் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்த சோதனை ஆபரேஷன் கிளீன் பிளாக்மணி என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 187 இடங்களில் நடைபெற்றது. 

தஞ்சையில் 7 இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் வீடுகளிலும், சென்னை அண்ணா நகரில் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும், நாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் செந்தில் நண்பர் சுப்பிரமணியன் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

187 இடங்களில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மீண்டும் சசிகலா உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. 

இந்நிலையில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.4,000 கோடி சொத்து ஆவணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios