தேர்தல் தோல்விக்கு பிறகு உலகம் முழுவதும் இருந்து ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒருகோடியை கடந்துள்ளது.

 

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, "என்னை பின்தொடரும் அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அமேதிக்கு செல்லும் நான் அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன்" என்றுக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.

அமேதி தொகுதியில், ஸ்மிருதி இராணியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தது அவருக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. இந்தநிலையில், பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செல்கிறார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்க உள்ளார்.