நாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித விமானங்களை கையில் வைத்துக் கொண்டு, பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர் பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப் படுகிறது.பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப் படுகின்றன. ரூ.59,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றி ருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தால் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவையில் இதே விவகாரம் நேற்றும் எதிரொலித்தது. இதனால் மாநிலங்களவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கேலி செய்யும் வகையிலும், சிஏஜி அறிக்கையை ஏற்க மறுத்தும் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெறுகிறது.இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கையில் காகித விமானங்களை வைத்துக்கொண்டு இந்த தர்ணாவில் ஈடுபட்டு வருவது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.