காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட்டை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதை தொடர்ந்து பட்ஜெட் குறித்து இன்று தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில், நாட்டின் பொருளாதாரத்துக்கான அடித்தளம் மிகவும் வலுவாக இருப்பதாகவும்,  மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பட்ஜெட் இருப்பதாகவும் கூறியிருந்தார். 

 ராகுல்காந்தி டிவிட்டரில்.. "அன்புள்ள பிரதமரே, பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. இந்த விஷயத்தில், உங்கள் மீது விழுந்திருக்கும் பழியை எப்படித் தவிர்ப்பது என மூளையைக் கசக்கி யோசித்துக்கொண்டிருப்பீர்கள். நிர்மலா ஜி சமர்ப்பித்த யோசனை இல்லாத, ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட்டை பயன்படுத்துங்கள். பின்னர் அவரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, முழு பழியையும் அவர் மீது போட்டுவிடுங்கள். பிரச்சினை தீர்ந்தது” என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.