Asianet News TamilAsianet News Tamil

அடித்து ஆடத் துடிக்கும் காங்கிரஸ்... விட்டதைப்பிடிக்க ராகுல் காந்தி மும்மரம்..!

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் வட்டாரத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மேவானி களமிறங்கிய வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் உதவியது.

Rahul Gandhi is busy trying to catch what the Congress has lost ..!
Author
India, First Published Sep 16, 2021, 5:12 PM IST

முன்னாள் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவரான கன்னையா குமார் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் எம்.பி ராகுல் காந்தியை சந்தித்துப்பேசியுள்ளார். 

அதே போல, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் வட்டாரத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மேவானி களமிறங்கிய வட்கம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் உதவியது.இதுகுறித்து கன்னையா குமாருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ‘’கன்னையா குமார் தான் சிபிஐ கட்சியில் ஒடுக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்.   இதனால், செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டார்’’என்கிறார்கள். 

Rahul Gandhi is busy trying to catch what the Congress has lost ..!

கன்னையா குமார் பிகார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஆர்வமாக இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாக பீகாரில் காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்து வந்தது. ஆனால், கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தனது சக கட்சிகளின் வெற்றியுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தது. காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால், ஆர்ஜேடி போட்டியிட்ட 144 இடங்களில் பாதிக்கும் மேல் வெற்றி பெற்றனர். அதே போல, சிபிஐ போட்டியிட்ட 19 இடங்களில் 12 இடங்களில் வெற்றி பெற்றது.Rahul Gandhi is busy trying to catch what the Congress has lost ..!

ஆகவே ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் போன்ற வளரும் நட்சத்திரங்களின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் நம்புகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா மற்றும் பிரியங்கா சதுர்வேதி போன்ற முக்கிய இளம் தலைவர்கள் கட்சியைவிட்டு வெளியேறி விட்டனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல இளம் தலைவர்கள் வெளியேறிய காங்கிரஸ் மைதானத்தில் தனது அடுத்த ஆட்டத்தைத் தொடங்குவதற்காக காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios