பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒரு மட்டமான அரசியல்வாதி என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

சூரத்தில் சோர்ஸ் இந்தியா 2018 3 நாள் கண்காட்சி நடந்தது. அதில், மத்திய அமைச்சர் ஸ்மிதிரானி கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

பிரதமர் நரேந்திர மோடி மீது, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறி வருகிறார். இதன் மூலம் அவர் மலிவான விளம்பரத்தை தேடி கொள்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறிவதுபோல், அவர் ஒரு கோமாளி இளவரசர் என்பதை, மணிக்கொரு முறை நிரூபிக்கிறார்.

ராகுல் மட்டமான அரசியலுக்கு முன்மாதிரியாகியுள்ளார். ஒரு புறம் அவர் பிரதமரை கட்டிப்பிடித்து, அன்பின் அரசியலைப் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் பிரதமரை விமர்சிப்பதில் இருந்து நாடாளுமன்றம் மற்றும் நாட்டு மக்கள் இடையே தன்னால் பொய் உரைக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.