அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். 

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த 9 வயதுச் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி அந்தச் சிறுமியின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் சொன்னது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

​டெல்லி அருகே, நங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம், அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மகளைக் காணவில்லை என சிறுமியின் பொற்றோர் தேடி அழைந்துள்ளனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி சிறுமி ஒருவரை மயானத்தில் வைத்து எரித்துக் கொண்டிருப்பதாக, தகவல் கிடைத்தது. அந்த சிறுமியின் உறவினர்கள் அங்கு சென்ற பார்த்தபோது, கோவில் பூசாரி உட்பட 4 பேர் சிறுமியின் உடலை ஏரித்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சிறுமியின் உறவினர் பூசாரியை தாக்கியுள்ளனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து விசாரித்தபோது, சிறுமி தண்ணீர் தொட்டியில் இருந்த மின் ஒயரை தொட்டதால், இறந்து விட்டதாக கூறி, தாயின் சம்மதம் பெறாமலேயே சிறுமியின் உடலை எரித்தாக கூறியுள்ளனர்.

பின்னர் எரிந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பூசாரி மற்றும் அவரது 3 நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பூசாரி ராதே சியாம் உட்பட 4 பேரை போலிஸார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

Scroll to load tweet…

​இந்நிலையில் அந்த சிறுமியின் ஊருக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி அவரது பெற்றோரை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், ‘’நான் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுடன் துணை நிற்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன்’’என்றார்.