காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில் ப. சிதம்பரம் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் புதுச்சேரியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தேனி போன்ற தொகுதிகளுக்கு கூட வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யைப் பொறுத்தவரை தற்போது அதிகாரமிக்க தலைவராக ப. சிதம்பரம் தான் கருதப்படுகிறார். ஏனென்றால் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே எஸ் அழகிரி கூட சிதம்பரத்தின் ஆதரவாளர்தான். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனது மகன் கார்த்திக் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று சிதம்பரம் உறுதியாக நம்பி இருந்தார்.

இந்த நம்பிக்கையில் ஒரு பகுதியாகத்தான் சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிகளை சிதம்பரத்தின் மகன் ஏற்கனவே துவக்கி விட்டார். அண்மையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தார் ராஜகண்ணப்பன் அவரது வீட்டிற்கே சென்று ஆதரவு கோரினார் கார்த்தி. இதற்கு சிவகங்கைத் தொகுதி தனக்குத்தான் ஒதுக்கப்படும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.

ஆனால் நேற்று வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே ப. சிதம்பரம் மாநிலங்களவை எம்பி யாக இருக்கிறார். இந்த நிலையில் சிவகங்கை தொகுதியை அவரது மகன் கார்த்திக்கு கொடுக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. அதேசமயம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவும் கூட தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு தகுதிகள் இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். திருச்சி தொகுதிகள் குஷ்பு கவனம் செலுத்தி வந்த நிலையில் அந்தத் தொகுதியை திருநாவுக்கரசருக்கு ஒதுக்கியுள்ளார் ராகுல் காந்தி. அதே சமயம் குஷ்புவை சிவகங்கை தொகுதியில் களம் இறக்குவது குறித்தும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தியதாக கூறுகிறார்கள். சிதம்பரத்தின் மகனை வேட்பாளராக அறிவிக்காமல் வேறு யாரேனும் ஒருவரை சிவகங்கையில் அறிவித்தால் அந்த வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதில் ராகுலுக்கு மட்டுமல்லாமல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுக்கும் குழப்பம் நீடிக்கிறது.

எனவேதான் சிவகங்கை தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து உள்ளார் ராகுல் காந்தி. ஆனால் இந்த நடவடிக்கை மூலம் தான் சிதம்பரம்தான் கடும் அதிருப்தியில் இருப்பதாக வும் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மூத்த நிர்வாகியான தான் கேட்டும் தனது மகனுக்கு சீட் கொடுக்காதது மிகப்பெரிய அதிர்ச்சி என்று சிதம்பரம் கருதுகிறார். இருந்தாலும் கூட வேட்பாளர் அறிவிக்கப்படாததால் சிவகங்கை தொகுதியில் தனது மகனை வேட்பாளராக நிறுத்துவதற்கான லாபியை சிதம்பரம் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.