பிக் பாஸ் போல செயல்படும் பிரதமர் மோடி, இந்தியர்களை உளவு பார்ப்பதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான செயலி, 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி என்ற பெயரில் இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்துகளையும் இணைத்து நமோ என்று அந்த செயலிக்கு பெயரிடப்பட்டது.

மோடி செயலியை பற்றி அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பிரான்ஸ் இணைய தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியட் ஆண்டர்சன் வெளிப்படுத்தியிருந்தார். நமோ செயலியில் மக்கள் தங்களின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்போது, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி அமெரிக்காவின் ”கிளெவர் டேப்” (Clever Tap) என்ற நிறுவனத்துக்கு பரிமாறப்பட்டு வருகிறது எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க நிறுவனத்துக்கு நரேந்திரமோடி செயலியில் பதிவு செய்துள்ள மக்களின் தனிப்பட்ட விவரங்கள் பரிமாறப்படும் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி கிண்டலாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.

அதற்கு ராகுல் டுவீட் செய்த பாணியிலேயே ராகுலுக்கு பாஜக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நமோ செயலி விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீண்டும் டுவிட்டரில் பதிட்டுள்ளார். இம்முறை பிரதமர் மோடி மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக ராகுல் முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுலின் டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடியின் நமோ செயலி மூலமாக ஆடியோ, வீடியோ, தொடர்பு விவரங்கள் என அனைத்தும் ரகசியமாக பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த செயலியை பயன்படுத்துபவர்கள் இருக்கும் இடம் வரை அனைத்தும் டிராக் செய்யப்படுகின்றன. பிக் பாஸாக செயல்படும் பிரதமர் மோடி, இந்தியர்களை உளவுபார்க்கிறார். மோடிக்கு தற்போது, இந்திய குழந்தைகளின் விவரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காக 13 லட்சம் என்.சி.சி மாணவர்கள், இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

Modi’s NaMo App secretly records audio, video, contacts of your friends & family and even tracks your location via GPS.

He’s the Big Boss who likes to spy on Indians.

Now he wants data on our children. 13 lakh NCC cadets are being forced to download the APP.#DeleteNaMoApp
— Rahul Gandhi (@RahulGandhi) March 26, 2018

பிரதமர் மோடி தனது பதவியை தவறாக பயன்படுத்தி இந்தியர்களின் விவரங்களை சேகரிக்கிறார். பிரதமர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுடன் தொடர்புகொள்வதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்கு பிரதமரின் அதிகாரப்பூர்வ செயலியை பயன்படுத்த வேண்டியதுதானே? இந்த தகவல்கள் எல்லாம் இந்தியாவினுடையது; மோடியுடையது அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Modi misusing PM position to build personal database with data on millions of Indians via the NaMo App promoted by Govt.

If as PM he wants to use tech to communicate with India, no problem. But use the official PMO APP for it.

This data belongs to India, not Modi.
— Rahul Gandhi (@RahulGandhi) March 26, 2018