சி.பி.எஸ்.இ வினாத்தாள் உட்பட பல்வேறு விஷயங்கள் கசிந்ததற்கு, பிரதமர் பலவீனமாக இருப்பதே காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளியல் ஆகிய தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். யாரோ செய்த தவறுக்கு நாங்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இனி கசிவுகள் ஏற்படாததை உறுதிப்படுத்த ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் அண்மையில் நிகழ்ந்த கசிவு குறித்து அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ வினாத்தாள்கள் கசிவு தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், சமீப காலமாக எத்தனை கசிவுகள்?தகவல் கசிவு, ஆதார் கசிவு, எஸ்எஸ்சி தேர்வு வினாத் தாள் கசிவு, தேர்தல் தேதி கசிவு, சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிவு. எல்லா விஷயங்களிலும் கசிவு ஏற்படுகின்றன. இதற்கு நாட்டின் காவல்காரர் (பிரதமர்) பலவீனமாக இருப்பதே காரணம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

कितने लीक?

डेटा लीक !
आधार लीक !
SSC Exam लीक !
Election Date लीक !
CBSE पेपर्स लीक !

हर चीज में लीक है
चौकीदार वीक है#BasEkAurSaal
— Rahul Gandhi (@RahulGandhi) March 29, 2018

ராகுலின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பிரதமர் பலவீனமானவர் என்று தங்களின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்த நிலையை ராகுல் நினைவுபடுத்தி பார்த்துள்ளார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.