கருணாநிதியை பார்க்க சென்னை வருகிறார் ராகுல்…சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியர் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் நலம் குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க இன்று சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ராகுல் காந்தி சென்னை வந்து நலம் விசாரித்துச் சென்றார். பின்னர் ஜெ மரணமடைந்தபோதும் சென்னை வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

ராகுல் காந்தி இரண்டாவது முறையாக சென்னை வந்தபோது கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் அவரை ராகுல் சந்தித்து நலம் விசாரிக்கவில்லை

இது திமுக வினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.கூட்டணி கட்சித் தலைவரான ராகுல் காந்தி , கருணாநிதியை சந்திக்காமல் சென்றது காங்கிரஸ் கட்சியிலேயே கூட சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னை வந்து கருணாநிதியிடம் நலம் விசாரித்து இப்பிரச்சனைக்கு ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைப்பார் என்றே தெரிகிறது.