காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் நேற்று நடைப்பெற்ற அக்கட்சியின் காரிய கடட்டி கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

கடந்த 1942–ம் ஆண்டு ஆகஸ்டு 8–ந் தேதி, மும்பையில்  நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தார்.

அந்த போராட்டம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி , காங்கிரஸ் கட்சியில் கொள்கை முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஆனாலும்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காங்கிரஸ் ஆற்றிய பங்கு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கான விழாவை நாடு முழுவதும் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.